வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (14:21 IST)

பொள்ளாச்சி பெண்ணின் அலறல்..’குற்றவாளிகளை எரித்துவிடுவேன் ’ - பிரபல இயக்குநர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் என் காதில் கேட்கிறது. ’’ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைத்தால் குற்றவாளிகளை அவர்களின் பெற்றோரின் கண்முன்பே எரித்துவிடுவேன்’’ என்று அடங்கமறு படத்தின் இயக்குநர் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளர்.
 
இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரத்துக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகள் பொதுமக்கள் என பலரும்  சமூல வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.
 
இதுகுறித்து தற்போது அடங்கமறு படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேலு தனது டுவிட்டர் பகத்தில்  பதிவிட்டுள்ளதாவது:
 
'பொள்ளாச்சி  பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகளை எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்களின் பெற்றோரின் கண் முன்பு பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவேன். பாதிக்கப்பட்ட பெண்னின் அலறல் என்னை தொந்தரவு செய்கிறது. குற்றவாளிகளை விசாரித்து தாமதிக்க வேண்ட்டாம், தூக்கில் போடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.''