வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (18:46 IST)

பேட்ட ட்ரைலர் அற்புதம் பாகுபலி நடிகர் புகழாரம் !

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகிவரும் பேட்ட படத்தின் ட்ரைலர்  பற்றி பாகுபலி நடிகர் கருத்து தெரிவித்துள்ளார்.


 
ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி, சிம்ரன், பாபிசிம்ஹா, த்ரிஷா என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின்  ட்ரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
ஆக்‌ஷன், காமெடி என சகல அம்சங்களுடன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. ‘பாக்கதான போற இந்த காளியோட ஆட்டத்த ’, ‘அடிச்சு அண்ட்ர்வேரோடு ஓட விட்ருவேன்’,  "தரமான சம்பவங்கள இனிமே தான் பாக்க போற’ உள்ளிட்ட பல மாஸ் வசனங்களுடன் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டுள்ளது பேட்ட ட்ரைலர் .
 
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் 9-ம் தேதி வெளியாகி இணையதள வாசிகள் அனைவரையும் ஈர்த்ததுது. அதனை தொடர்ந்து  டீஸர் டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று வெளியானது.
 
இந்நிலையில் பேட்ட படத்தின் ட்ரைலர் பார்த்த பாகுபலி வில்லனான நடிகர் ரானா டகுபதி ட்விட்டரில், அற்புதமாக உள்ளது எனவும் ரஜினி பீல்டு என்றும் பதிவிட்டுள்ளார்.