திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (09:16 IST)

ரண்வீர் சிங் மீண்டும் நிர்வாண போட்டோஷூட் நடத்த வேண்டும்… பீட்டா அமைப்பு அழைப்பு!

சமீபத்தில் ரண்வீர் சிங் தன்னுடைய நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ரண்வீர் சிங். சக பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனை சமீபத்தில் இவர் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் வெளியான 83 படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் வேடத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த போஸுக்காக கவனத்தைப் பெற்றார். பேப்பர் என்ற அந்த ஊடகத்துக்காக ரண்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தா. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்தன. அவர் மேல் ஆபாசமாக நடந்துகொண்டதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இது சம்மந்தமாக பீட்டா நிறுவனத்தின் சார்பில் ”பீட்டா இந்தியாவிடமிருந்து வாழ்த்துக்கள். உங்கள் பேப்பர் இதழின் போட்டோ ஷூட்டை நாங்கள் பார்த்தோம் - மேலும் எங்களுக்காகவும் நீங்கள் மீண்டும் ஒரு முறை நிர்வாண போஸ் கொடுப்பீர்கள் என நம்புகிறோம்.
விலங்குகள் மீது இரக்கத்தை உருவாக்க, 'அனைத்து விலங்குகளும் ஒரே பாகங்களைக் கொண்டிருக்கின்றன - சைவ உணவை முயற்சிக்கவும்' என்ற கோஷத்துடன் நிர்வாண PETA இந்தியா விளம்பரத்தில் தோன்றுவதை நீங்கள் பரிசீலிப்பீர்களா?” எனக் கூறியுள்ளது.