1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 9 டிசம்பர் 2019 (16:33 IST)

இடியட்ஸ் ...நீங்க ஜல்ஸா பண்றதுக்கு எங்க ஊரை ஏன் கேவலப்படுத்துறீங்க - டோஸ் விட்ட நெட்டிசன்!

மாடல் அழகியான ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர்  "வேலையில்லா பட்டதாரி 2"  படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஹாரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமா திரையில் அடியெடுத்து வைத்தார். 
 
இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து நிறைய காதல் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அதை இருவரையும் மறுத்து வந்தாலும் ரேசாவுக்கு ஹாரிஸ் கல்யாண் மீது ஒரு கண்ணு இருக்கு என்பதை அவரே நிறைய பேட்டிகளில் வெளிப்படையாக கூறியிருந்தார். 
 
இந்நிலையில் தற்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் போட்டிருந்த ஒரு ட்விட் தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நடிகர் ஹாரீஷ் கல்யாண் உடன் டேட்டிங் செய்ய ஆசை என்றும் அது தமிழகத்தின் நலனுக்காக என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தனை கண்ட இணையதள வாசிகள் அவரை இஷ்டத்துக்கு திட்டி தீர்த்து வருகின்றனர். அதில் ஒருவர்  நீங்க ஜல்சா பண்ணா தமிழ்நாடு எதுக்கு ஹேப்பி ஆகணும். ஊரை கேவலப்படுதாதிங்க என்று கூறி கடுமையாக திட்டியுள்ளார்.