1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (13:06 IST)

நடுவுல கொஞ்சம் பேண்டை காணோம் - கிண்டலுக்குள்ளான அதிதி ராவ் ஹைதாரி!

மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் அதிதி ராவ். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர் அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார்.
 
இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாவது முறையாகவும்  மணிரத்தினம் இயக்கத்தில் "நவாப்" என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது. அதையடுத்து மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள "சைக்கோ" என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த வருகிற கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 27ம் தேதி வெளியாகவிருக்கிறது. மேலும் இந்தியில் The Girl on the Train என்ற படத்தில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்திற்கு அவரது ரசிகர் ஒருவர் "நடுவுல கொஞ்சம் பேண்டை காணோம்" என கமெண்ட்ஸ் செய்து கலாய்த்துள்ளார்.