வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2017 (18:48 IST)

விஜய் கேரக்டரில் நடிக்கும் பவர் ஸ்டார்....

நடிகர் விஜய் நடித்த தெறி படம் தெலுங்கில் ரிமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தில் டோலிவுட் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார்.


 
 
தமிழில் வெளியான தெறி படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தை தெலுங்கில் இயக்குனர் திரிவிக்ரம் ரீமேக் செய்யவுள்ளார். 
 
தமிழில் விஜய் நடித்த கேரக்டரில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். தமன் இசையமைக்கவுள்ளார். இந்த தகவலை தமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தின் தெலுங்கு பதிப்பில் பவன் கல்யாண் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.