மெர்சல்' படத்திற்கு போனஸ் பாடலை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படம் அடுத்த வாரம் வெளிவரவுள்ள நிலையில் இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் தீபாவளி' என்பது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகாததால் படகுழுவினர் புத்தம் புதிய ஸ்டில் மற்றும் புரமோ வீடியோவினை வெளியிட்டு விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் ரசிகர்களுக்காக புதிய போனஸ் பாடல் ஒன்றை இந்த படத்தில் இணைத்துள்ளார்.
பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலின் வரிகள் இதோ:
வலை இல்ல காத்தப் புடிச்சு வர
அடித்தளம் இரும்பில் பாக்காத உரச
தடையின் தடயம் உடைய வருக
அழிக்க நெனச்சா ரெண்டா வருவானே
உலக உயரங்கள் பேசும் இவன் பலத்த
பொழியும் சாதனை அதுக்கில்ல எல்ல
ரசிகர் கூட்டம் படச்சு கனவ
வெதப்பான் வழியக் காட்டி நடப்பான்