வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (19:08 IST)

பட்டைய கிளப்பும் "பட்டாஸ்" இரண்டாம் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

பொங்கல் தினத்தை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் கடந்த 16ம் தேதி வெளியான படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். 
 
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இளம் இரட்டையர்களான விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலில் கல்லா கட்டி வருகிறது. 
 
அந்தவகையில் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 6.5 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இரண்டாம் நாளில் 5.5 கோடி வசூல் செய்து நல்ல கலெக்ஷனை ஈட்டி வருகிறது.