புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (17:46 IST)

பட்டாஸ் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் அசாத்திய வெற்றிக்கு பிறகு தற்போது "பட்டாஸ் " படம் வெளியாகி உள்ளது. 
 
செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக சினேகா, மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். 
 
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 
 
இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ. 6.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.