புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (09:52 IST)

சிம்புவுடன் ஒரே நேரத்தில் இரண்டு படம் – முன்னணி நடிகருக்கு செம்ம ஜாக்பாட்!

நடிகர் சிம்புவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கும் பார்த்திபன் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

நடிகர் பார்த்திபன் எப்போதும் யாரையும் பாராட்டிப் பேசுவதற்கு தயங்குவதில்லை. சமயங்களில் அவர் பாராட்டுகள் எல்லாம் கொஞ்சம் ஓவரோ என நினைக்கும் அளவுக்குக் கூட இருக்கும். அந்தவகையில் சமீபத்தில் நடிகர் சிம்பு பற்றிய பேசிய பார்த்திபன் அவரை ஒரு சுயம்பு எனக் கூறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவலாக கவனிக்கப்பட்டது.

இதையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சுயம்பு’சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட,உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார்.Mr Simbu நன்றியதில் Mr பண்பு ஆனார் எண்ணப்புத்தகத்தில்! “எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் ஏன் workபண்ணலேன்னு” அதாகப்பட்டது.... விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!!’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் வாக்கு பலிக்கும் விதமாக சில நாட்களுக்கு முன்னர் மலையாள படமான அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்னொரு மகிழ்ச்சி செய்தியாக சிம்பு நடிக்கும் படம் ஒன்றை இயக்க பார்த்திபன் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.