வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (18:17 IST)

சிம்புவுடன் இணையும் பார்த்திபன்… அட செம்ம காம்பினேஷனா இருக்கே- ரீமேக் படத்தில் திடீர் மாற்றம்!

நடிகர் சிம்பு மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கோஷியாக கார்த்தியும், அய்யப்பனாக பார்த்திபனும் நடித்தால் நன்றாக இருக்கும் என அந்த படத்தின் மறைந்த இயக்குனர் சாச்சி கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் பார்த்திபனும் சிம்புவும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தமிழில் பைவ்ஸ்டார் குருப் கதிரேசன்  தயாரிக்க உள்ளார். இன்னும் படத்தின் இயக்குனர் உள்ளிட்ட விவரங்கள் முடிவாகவில்லை.