விடாமுயற்சி படத்தின் லாபத்தில் பங்கு… லைகா நிறுவனத்தை வைத்து செய்த ஹாலிவுட் பட நிறுவனம்!
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தைத் திரையில் பார்க்கும் ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தன. ஆனால் திடீரென்று லைகா நிறுவனம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என அறிவித்தது.
அதற்குக் காரணமாக சொல்லப்பட்டது விடாமுயற்சி திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் அது சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனத்திடம் முதலிலேயே அதிகாரப்பூர்வமாக கதை உரிமையைப் பெறவில்லை என்பதால் தயாரிப்பு நிறுவனமான பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கேட்டு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் சொல்லப்பட்டது.
இது சம்மந்தமாக நடந்த பேச்சுவார்த்தையில் இப்போது ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி கதைக்காக உரிமைத் தொகையாக முதலில் 10 கோடி ரூபாயும், அதன்பின்னர் படத்தின் வசூலில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைப் பங்காக பெற்றுக் கொள்வதாகவும் சொல்லி படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.