1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2025 (14:51 IST)

துபாயை அடுத்து போர்ச்சுகல் செல்லும் அஜித்தின் ரேஸ் அணி!

நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கார் ரேஸ் பந்தயங்களில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இனிமேல் ஆண்டுக்கு ஒரு படம் நடித்துவிட்டு ஆறு மாத காலம் ரேஸ்களில் அவர் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக அவர் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணி மூன்றாவது இடத்தை பெற்றதையடுத்து அஜித்துக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அஜித்தின் சக நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரை வாழ்த்தினர்.

இதையடுத்து போர்ச்சுகலில் நடக்கவுள்ள மற்றொரு ரேஸ் போட்டியில் அஜித் தனது அணியினருடன் பங்கேற்க சென்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் முதல் மார்ச் வரை நடக்கவுள்ள அனைத்து ரேஸ் போட்டிகளிலும் அஜித் அணி பங்கேற்கும் என சொல்லப்படுகிறது.