ஜெயம் ரவிக்கு எழுதிய கதையில் விஜய் சேதுபதியை இயக்கும் பாண்டிராஜ்!
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.
ஆனால் அந்த படம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க பிரபல நடிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இடையில் பாண்டிராஜ், விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் இருவருமே கைவிரித்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.
இதற்கிடையில் பாண்டிராஜ் ஒரு பேமிலி செண்ட்டிமெண்ட் கிராமத்து கதையை எழுதி அதை ஜெயம் ரவிக்கு சொல்லியிருந்தார். அவரும் நடிக்க சம்மதம் சொல்ல, அந்த படத்தை அவரின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் சம்பள விஷயத்தில் ஜெயம் ரவிக்கும் அவரது மாமியாருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழ, அந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இப்போது அதே கதையைதான் பாண்டிராஜ் விஜய் சேதுபதி நடிக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.