புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 25 ஜூலை 2018 (16:19 IST)

உங்களுக்கு என்னடா தெரியும் மாட்ட பத்தி - பீட்டாவை வெளுத்து வாங்கிய இயக்குனர்

கடைக்குட்டி சிங்கம் படத்தில் இடம் பெற்றிருந்த ரேக்ளா ரேஸ் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த பீட்டா இயக்கத்தை அப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் கடுமையாக கண்டித்துள்ளார்.

 
நடிகர் கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்ட ஒரு நடிகர், நடிகை பட்டாளமே நடித்து வெளியான கடைக்குட்டி சிங்கம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் தொடக்கத்தில் படத்தின் நாயகன் கார்த்தி ரேக்ளா போட்டியில் கலந்து கொண்டு போட்டி வெற்றி பெறுவது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த காட்சிக்கு பீட்டா கடும் எதிர்ப்பை கிளப்பியது. சென்சாரில் இதை தடை செய்ய நடவடிக்கைகள் எடுத்தது. ஆனாலும்,அந்த காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியதால் அந்த காட்சிகள் தப்பித்தன எனக்கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் “மாட்டின் மீது எங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு என்னடா இருக்கு? ஒரு திருமணத்திற்கு சென்றால் கூட நாங்கள் சாப்பிடாமல் மாட்டுக்கு புல் வைக்க வேண்டும் என வீட்டுக்கு நாங்கள் ஓடி வருவோம்டா. நான் மாடு மேய்த்து வளர்ந்தவன். ஏசி அறையில் அமர்ந்து சிக்கன், மட்டன் பிரியாணி என சாப்பிடும் நீங்கள் எங்களை குறை சொல்லாதீங்கடா!” என பீட்டாவை வெளுத்து வாங்கியுள்ளார்.