திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (15:35 IST)

`பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இருந்து விலகும் வசந்த்? இவருக்கு பதில் இவர் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் வசந்த் அந்த தொடரில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் என்ற கேரக்டரில் வசந்த் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. அவருக்கு பதிலாக முதல் பாகத்தில் நடித்த வெங்கட், செந்தில் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

ஏற்கனவே முதல் பாகத்தில் வெங்கட் நடித்திருந்த நிலையில் அவரை இந்த சீசனிலும்  பார்க்க வாய்ப்பு ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் வசந்த் இந்த சீரியலில் இருந்து விலகுவது தங்களுக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் அவர் தொடர்ந்து இந்த சீரியலில் நடிக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து வசந்த் விலகி விட்டதாக இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva