வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 11 ஜூலை 2024 (07:51 IST)

அஜித் - வெங்கட் பிரபு திடீர் சந்திப்பு.. ‘மங்காத்தா 2’ உருவாகிறதா?

நடிகர் அஜித்தை வெங்கட் பிரபு திடீரென சந்தித்துள்ளதாகவும் இந்த சந்திப்பின்போது மங்காத்தா 2 படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் உருவான மங்காத்தா என்ற சூப்பர் ஹிட் படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார் என்பதும் அதன் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடந்து பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்த கோட் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால் வெங்கட் பிரபு மார்க்கெட் உயரும் என்று கூறப்படும் நிலையில் தான் அஜித் - வெங்கட் பிரபு சந்திப்பு நடந்துள்ளது.

இந்த சந்திப்பின்போது மங்காத்தா 2 படத்தின் கதையை அஜித்திடம் வெங்கட் பிரபு கூறியதாகவும் அந்த கதையை கேட்டு இம்ப்ரஸ் ஆன அஜித் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு மங்காத்தா 2 ஆரம்பிக்கலாம் என்று வாக்குறுதி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் அனேகமாக மங்காத்தா 2 படமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva