விவேக் ஜோடியாக தேவயானி நடிக்கும் ‘எழுமின்’
விவேக் ஜோடியாக முதன்முறையாக ‘எழுமின்’ என்ற படத்தில் நடிக்கிறார் தேவயானி.
தமிழில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் தேவயானி. இன்றைக்கும் முன்னணி நடிகர்களாகத் திகழும் விஜய், அஜித்துக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர். அதன்பிறகு அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடித்த தேவயானி, தற்போது விவேக் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.
தற்காப்புக்கலையை மையமாக வைத்து உருவாகும் ‘எழுமின்’ படத்தை, விஜி தயாரித்து, இயக்குகிறார். இவர் ஏற்கெனவே கலையரசன் நடித்த ‘உரு’ படத்தை தயாரித்தவர். சில குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இன்று தொடங்கியுள்ளது.