புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (08:02 IST)

பா ரஞ்சித் இயக்கும் இந்திப்படத்தின் முக்கிய அறிவிப்பு

பா ரஞ்சித் காலா படத்திற்குப் பிறகு அடுத்ததாக இயக்கப்போகும் இந்திப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

பா ரஞ்சித் அட்டகத்தி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். அதன் பிறகு கார்த்தியை வைத்து மெட்ராஸ் இயக்கியதன் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவரானார். அதன் பின் ரஜினியை வைத்து அவர் இயக்கிய கபாலி மூலம் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குனரானார். அந்த படத்தின் வெற்றியால் ரஜினியை வைத்து மீண்டும் காலாவை இயக்கினார். காலா விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றி பெறவில்லை.

தான் இயக்கிய எல்லா படங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் ஒடுக்குமுறைக்கு எதிரான குரலையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இதையடுத்து காலாவுக்கு பின் இந்தியின் முக்கியத் தயாரிப்பாளர்களில் ஒருவரான நமா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் பிரம்மாண்டமான வரலாற்றுப் பின்னணி கொண்ட படத்தை இயக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியானது.

தற்போது அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த படத்தின் தலைப்பு பிர்சா முண்டா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிர்சா முண்டா என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  பழங்குடி மக்களுக்காகப் போராடிய போராளி ஆவர். அவரது வாழ்க்கை வரலாறையையே தற்போது ரஞ்சித் படமாக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.