திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (10:36 IST)

பிக் பாஸ் வீட்டில் ஓவியா உண்ணாவிரதம்: பதட்டத்தில் சக போட்டியாளர்கள்!

பிக் பாஸ் வீட்டில் ஓவியா உண்ணாவிரதம்: பதட்டத்தில் சக போட்டியாளர்கள்!

நடிகை ஓவியா பிக் பாஸ் வீட்டில் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அங்கு உள்ள மற்ற போட்டியாளர்கள் ஒருவகையான பதட்டத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர்.


 
 
நடிகர் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியா மிகவும் பிரபலமானார். அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
ஆனால் இந்த வார தொடக்கத்தில் இருந்து ஓவியா மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் அவரது ரசிகர்களும் மிகுந்த உளைச்சலில் உள்ளனர். ஆரவ்-ஓவியா இருவரும் காதலர்கள் மாதிரி நெருங்கி பழகுவது அனைவருக்கும் தெரிந்ததே. காதலர்கள் போல் ஆரவ் பழகினாலும் தன்னுடைய வார்த்தைகளில் உஷாராக இருக்கிறார். ஆனால் அவரது உடல் மொழி அப்படியில்லை, காதலர்களை போல தான் காட்டுகிறது.

 

 
 
சில நேரங்களில் நெருக்கமாக இருக்கும் ஆரவ், சில நேரங்களில் விலகி நடக்க ஆரம்பிக்கிறார். இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது பிக் பாஸ்ஸுக்கு தான் வெளிச்சம். நெருக்கமாக இருக்கும் ஆரவ் விலக ஆரம்பித்தது ஓவியாவால ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது தான் ஓவியா அடுத்தடுத்து நடப்பதற்கு காரணம்.
 
இந்நிலையில் ஆரவிடம் அழுது புலம்பி பார்த்தும் ஆரவ் ஏதோ கேமாரா, மற்றவர்களுக்காக ஓவியாவை புறக்கணிக்கிறார். ஆனால் ஓவியா இது எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. ஓவியா ஓவியாவாகவே உண்மையாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது புரோமோ ஒன்றை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
 
அதில், ஓவியா பிக் பாஸ் வீட்டில் எதுவும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கிறார். வழக்கத்துக்கு மாறாக ரைசா கூட ஓவியாவுக்கு சாப்பிட ஸ்வீட் கொண்டு வந்து கொடுக்கிறார். ஆனால் ஓவியா நீங்க கூட ஸ்வீட்டாக தானே இருக்கீங்க நீங்களே சப்பிடுங்க என கூறுகிறார். வீட்டுக்கு புதிதாக வந்த பிந்து மாதவி கூட ஓவியாவை சப்பிட சொல்கிறார் ஆனால் ஓவியா கேட்கவில்லை.
 
காயத்ரி ரகுராமும் சாப்பிட சொல்கிறார், ஆனால் ஓவியா அவரையும் நோஸ் கட் பண்ணுகிறார். இதனையடுத்து பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பதட்டத்தில் உள்ளனர். ஓவியா கேமாரா முன்பு வந்து நீங்க கால் பண்ற வரைக்கும் சாப்பிட மாட்டேன் என கூறுகிறார். இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது ஓவியா தன்னை வெளியே அனுப்ப பிக் பாஸ்ஸிடம் கோரிக்கை வைத்திருப்பாரோ என யூகிக்க தோன்றுகிறது.