புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (14:41 IST)

கூட்டமே இல்லை… கேன்சல் ஆகும் ஷோக்கள்!

இன்று ரிலீஸ் ஆன படங்கள் எதுவும் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை என்றே சொல்லவேண்டும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்த வலிமை உள்ளிட்ட படங்கள் ரிலீஸில் இருந்து பின் வாங்கியதால் பல சிறிய பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலிஸை பொங்கலுக்குக் கொண்டுவந்துள்ளன. ஆனால் இன்று ரிலீஸ் ஆன எந்த படத்துக்கும் ரசிகர்கள் இடையே வரவேற்பு இல்லை. அதுமட்டுமில்லாமல் எந்த படமும் நல்ல விமர்சனத்தையும் இதுவரை பெறவில்லை. அதனால் கூட்டம் குறைவாக வந்த காட்சிகளுக்கு ஷோவை திரையரங்க நிர்வாகங்கள் கேன்சல் செய்து வருகின்றனவாம். இதனால் இந்த பொங்கல் ரசிகர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதுபற்றி யுடியூபில் சினிமா விமர்சனம் செய்துவரும் செகண்ட் ஷோ என்ற இணையதள சேனலின் ரஹ்மான் வெளியிட்டுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது பதிவில் ‘டிரைலர் நல்லாருக்கேன்னு #கார்பன் படத்துக்கு 9 மணி ஷோ போனா, தியேட்டரல மொத்தமே 2 பேர்தான்னு ஷோ கேன்சல் பண்ணிட்டாங்க... சரி, 9:30 மணி ஷோக்கு #கொம்புவெச்சசிங்கம் போலாம்ன்னா... தியேட்டர்ல நான்தான் முதல் ஆளு. அதுவும் ஷோ cancel. ஏதாவது ஒரு படத்தை பார்த்துட்டுதான் போறதுன்னு, பக்கத்துல வேற ஒரு தியேட்டர்ல #நாய்சேகர் 10 மணி ஷோவுக்கு வந்தா.... 12 பேர் வந்திருக்காங்கன்னு, screen 1ல இருந்த ஆளுங்களை எல்லாம் screen 2'வுக்கு போக சொல்லி ஒரு வழியா படம் தொடங்கிடுச்சு. ஆனா, படம் எப்படியிருக்குன்னு மட்டும் கேட்காதீங்க’ எனக் கூறியுள்ளார்.