1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 11 ஜனவரி 2025 (09:39 IST)

எனக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.. எனக்கு புடிச்சத செய்வேன்! - கார் ரேஸ் குறித்து அஜித்குமார் பேட்டி வைரல்!

ajithkumar

நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெறும் 24H ரேஸில் கலந்து கொள்ளும் நிலையில் அங்கு அளித்த பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது.

 

 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித்குமார் ரேஸிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், அஜித்குமார் கார் ரேஸில் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது துபாயில் சர்வதேச 24H கார் ரேஸ் பந்தயம் நடைபெறும் நிலையில் அதில் அஜித்குமாரின் கார் ரேஸ் குழுவும் போட்டியிடுகின்றனர்.

 

இந்த போட்டி இன்று தொடங்கி நடைபெறும் நிலையில் அதை காண அஜித்குமார் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கார் ரேஸில் அஜித்குமாரை பேட்டி எடுத்த ஒருவர் “நீங்கள் சில படங்களில் கமிட் ஆகியிருக்கிறீர்கள். அந்த படங்களை தயாரிப்பவர்கள் நீங்கள் கார் ரேஸில் கலந்துக் கொள்ள வேண்டாம் என சொன்னார்களா?” என கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு பதில் அளித்த அஜித்குமார் “அப்படி யாரும் எதுவும் சொல்லவில்லை. மேலும் நான் இதை செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது என்று வேறு யாரும் சொல்ல முடியாது. படங்கள் கமிட் ஆகும்போது ரேஸ் வர மாட்டேன். ரேஸ் சீசன்களில் முழுவதுமாக படங்களை முடித்துவிட்டு ரேஸில் கவனம் செலுத்துவேன். இரண்டையும் தனித்தனியாக கையாள்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார். அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள், அஜித்குமார் வெற்றி பெற வாழ்த்தி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K