வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (19:06 IST)

திருமணம் இல்லை, நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்: சுஷ்மிதா சென் பதிவு

Sushmita sen
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியை நடிகை சுஷ்மிதாசென் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் திருமணம் இல்லை மோதிர மாற்றமில்லை மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன் என்றும் திருமணம் செய்யவில்லை என்றும் இது குறித்து பலர் கேள்வி கேட்ட போது ஏராளமான விளக்கம் கொடுத்து விட்டேன் என்று அன்றாட பணிகளை நாம் கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
எப்போதும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்வதற்கு நன்றி என்றும் மற்றவர்களுக்கு உங்கள் வேலை எதுவோ அதை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்றும் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது