செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2017 (19:36 IST)

முக அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட இளம் நடிகை??

நடிகைகள் பலர் தங்களை இளமையாய் வைத்துக்கொள்ள பல சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இந்த லிஸ்டில் இளம் நடிகையான நிவேதா தாமஸ் இணைந்துள்ளாராம்.


 
 
கமலின் பாபநாசம், விஜய்யின் ஜில்லா போன்ற படங்களில் நடித்திருந்தார் நிவேதா தாமஸ். தற்போது தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கு, கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 
 
இவர் தனது இணைய தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமான முகவசீகரம் குறைந்து காணப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இதனால் முக அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து இப்படி ஆகிவிட்டது என கூறப்பட்டது. ஆனால், நிவேதா மேக் அப் இல்லாமல் புகைப்படத்தை எடுத்ததால்தான் அவரது தோற்றம் இதுபோல் இருப்பதாக கூறியுள்ளனர்.