பொம்பள விஜய் சேதுபதி... விபரீத ஆசையில் நிவேதா பெத்துராஜ்!!
பொம்பள விஜய் சேதுபதியாக இருக்க ஆசைப்படுகிறேன் என நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்டி.
தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டிலிருந்தே வந்து அறிமுகமாகி பிரபலமான சொற்பமான நடிகைகளுள் நிவேதா பெத்துராஜும் ஒருவர். ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் படங்களில் நடித்த இவர் தற்போது டோலிவுட்டில் பிஸி நடிகை.
இந்நிலையில் அவர் தனது சமீபத்திய பேட்டியில், தெலுங்கில் எனக்கு நல்ல நல்ல கேரக்டர்கள் கிடைக்கின்றன. அதை அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். எனக்கு அனைத்து கேரக்டர்களிலும் நடிக்க ஆசை. கதைக்கு தேவைப்பட்டால் கிளாமராகவும் நடிக்க தயார்.
பொம்பள விஜய் சேதுபதியாக இருக்க ஆசைப்படுகிறேன். அதாவது ஹீரோயின், வில்லி என எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.