வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (10:28 IST)

ஈஸ்வரன்னு பேரு வெச்சதுக்கு இப்படியா..? – வைரலாகும் சிம்புவின் சிவன் கெட்டப்!

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் சிம்புவை சிவன் கெட்டப்பில் ரசிகர்கள் சித்தரித்து வைத்துள்ள பேனர் வைரலாகியுள்ளது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் ஈஸ்வரன். தற்போது பொங்கலுக்கு புதிய படங்கள் வெளியாவதையோட்டி திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சிம்பு ரசிகர்கள் ஈஸ்வரன் படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்ட சிம்பு ரசிகர்கள் ஈஸ்வரன் படம் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தி சிம்புவை சிவனாக சித்தரித்து வைத்துள்ள பேனர் வைரலாகி வருகிறது. அதேசமயம் பிற ரசிகர்கள் என்னதான் ஈஸ்வரன்னு படம் பேரு வெச்சாலும் அதுக்காக இப்படியா பண்றது என்ற லெவலிலும் பேசி வருகிறார்களாம்.