வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (12:10 IST)

திடீரென கல்யாண மேடையில் குத்தாட்டம் போட்ட நடிகை நிவேதா தாமஸ் - வைரல் வீடியோ

குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர். இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். 
ஆனால் , தனக்கு கிடைக்கும் அனைத்து படத்திலும் நடிப்பதை தவிர்த்துவிட்டு, கதை மற்றும் கதாப்பாத்திரம் பொறுத்தே நடிப்பதா, தவிர்ப்பதா என்ற குழப்பத்தில் இருக்கிறார் நிவேதா தாமஸ்.
 
சினிமாவை தாண்டி நடிகைகள் எது செய்தாலும் வைரல் ஆகிவிடும். அவர்கள் ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றாலும் சமூக வலைதளங்களில் பரவிடும்.
 
அதுவும் இப்போதெல்லாம் பிரபலங்களே தாங்கள் செய்யும் வேலைகளை உடனுக்குடன் டுவிட்டர், இன்ஸ்டா போன்றவற்றில் பதிவு செய்து விடுகிறார்கள்.
 
அப்படித்தான் அண்மையில் நடிகை நிவேதா தாமஸ் ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு தனது தம்பியுடன் செருப்பை எல்லாம் கழற்றிவிட்டு பிரபுதேவாவின் குலேபா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அதை அவரே இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
அவரின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர், அட்டகாசம் என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். 
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.