ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (21:35 IST)

அடுத்த வாரமே இவனுக்கு சிலர் முட்டு கொடுப்பார்கள் - பிரபல இயக்குனர் டுவீட்

mohan g
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை காதலித்து வந்த சதீஷ் என்பவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததற்கு பிரபல இயக்குனர் தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை காதலித்து வந்த சதீஷ் என்பவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதில் காதல் தோல்வி காரணமாக அவர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் கொலையாளிகளை உடனே தண்டிக்கும்படி நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரபலங்கள்  தங்கள் கருத்துகள் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திரவுபதி, பகாசூரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி தன் டுவிட்டர் பக்கத்தில், ரயிலுக்கு காத்திருக்கும் பெண்ணை காதலிக்க மறுத்ததால் ஓடும் ரயிலில் தள்ளி கொலை. இரவே மகள் இறந்த துயரத்தால் தந்தை விஷம் குடித்து தற்கொலை. தள்ளி விட்டவனை கைது செய்து விசாரித்து ஜெயிலுக்கு அனுப்பி அவனுக்காக பெயிலும் வாங்குவார்கள். அடுத்த வாரமே இவனுக்கு சிலர் முட்டு கொடுப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj