1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (20:46 IST)

‘ஹிப் ஹாப் தமிழா’வின் அடுத்த மியூஸிக் வீடியோ

‘ஹிப் ஹாப் தமிழா’வின் அடுத்த மியூஸிக் வீடியோ விரைவில் வெளியாக இருக்கிறது.
‘கிளப்புல மப்புல’ பாடல் மூலம் புகழ்பெற்ற ஆதி, ஜீவா இருவரும் இணைந்து ‘ஹிப் ஹாப் தமிழன்’ என்ற மியூஸிக் ஆல்பத்தை 2012ஆம் ஆண்டு வெளியிட்டனர். இதுதான் இந்திய அளவில் வெளியான முதல் தமிழ் ஹிப் ஹாப் ஆல்பம். அந்த ஆல்பத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க, தற்போது  இருவரும் பிஸியான இசையமைப்பாளர்களாக இருக்கின்றனர்.
 
இதில் ஜீவாவுக்கு வெளியில் முகம் காட்ட விருப்பம் இல்லாததால், ஆதியே எல்லா இடங்களிலும் பேசி வருகிறார். ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஆன இவர்கள், ‘இன்று நேற்று நாளை’, ‘தனி ஒருவன்’, ‘மீசைய முறுக்கு’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட பல படங்களுக்கு  இசையமைத்துள்ளனர்.
 
‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் மாறிய ஆதி, தற்போது இன்னொரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், ‘மாணவன்’ என்ற மியூஸிக் வீடியோவை இவர்கள் வெளியிட இருக்கின்றனர்.