''வலிமை'' படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் !!!
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்- பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை.
இப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலானது.இந்த நிலையில் வலிமை படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாடல் ஒரு ராப் பாடல் என்றும் இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள வலிமை படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கோபுரம்பிலிம்ஸ் அன்புச் செழியன் வாங்கியிருந்தார். இதன் விற்பனை முடிந்த நிலையில் வெளிநாட்டு உரிமை தொடங்கியுள்ளது. அதில், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆகிய நாடுகளின் இப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் வாங்கியுள்ளதாக அந்நிறுவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.