1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 30 ஜூலை 2018 (13:15 IST)

அடுத்த கமல் தனுஷ் தான்; பிரபல நடிகை ட்வீட்

தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் டீசர் கடந்த சனிக் கிழமை 28 ஜூலை அன்று வெளியானது. அதை பார்த்த கஸ்தூரி அடுத்த கமல் தனுஷ் என  புகழ்ந்துள்ளார்.
இந்நிலையில் எப்போதுமே சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை கஸ்தூரி. அவ்வப்போது அரசியல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் ரிலீஸான தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.
 
கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 28ஆம் தேதி தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வட  சென்னை திரைப்பட டீசர் வெளியிடப்பட்டது. எப்போதுமே வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் எதிர்ப்பார்ப்பும் அதிகம் இருக்கும். இந்த நிலையில், தனுஷின்  வட சென்னை டீசரைப் பார்த்த கஸ்தூரி தனது ட்விட்டரில், "வட சென்னை டீசர் பாத்துட்டேன், அடுத்த கமல் தனுஷ் தான்... தனுஷேதான்..!" என புகழ்ந்து  பதிவிட்டுள்ளார்.