1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (23:56 IST)

தனுஷ்-ன் ’நானே வருவேன்’ படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கவுள்ள நானே வருவேன்  என்ற படம் குறித்து செல்வராகவன் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
 


மேலும்,தனுஷ் என்ற அசுரன் எதிரியாக நினைப்பவர்களும் கொண்டாடிதான் ஆக வேண்டும் என திரும்பவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து, முடிவில் பயத்தையும் பதட்டத்தையும் தந்தும் அனுப்புகிறார் கர்ணனாக! எனத் தெரிவித்துள்ளார் குறிப்பிடத்தக்கது..

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூபவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

இந்நிலையில் இப்படம் குறித்த செல்வராகவன் முக்கிய தகவல் வெளிவிட்டுள்ளார். அதில், தற்போது தி கிரெ மேன் என்ற ஹாலிவுட் படத்தில் பணியாற்றி வரும் தனுஷ் இந்தியா திரும்பியதும் நானேவருவேன் பட ஷூட்டிங் தொடங்கும் எனவும்,  வேறு எந்தப் படத்திற்கும்விட இப்படத்திற்கு நான் அதிக முன் தயாரிப்பு பணிகளில் நான் ஈடுபட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.