திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:47 IST)

நவம்பர் மாதம் மட்டும் புது படம் ரிலீஸ… தயாரிப்பாளர்கள் புதிய அறிவிப்பு!

விபிஎப் கட்டணம் நவம்பர் மாதத்துக்கு மட்டும் 100 சதவீதம் தள்ளுபடி என அறிவிக்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் மட்டும் புதுப்படங்கள் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே விபிஎஃப் கட்டணத்தை செலுத்துவது குறித்து எழுந்துள்ள பிரச்சினை முடிவடையாத நிலையில் உள்ளது.

இன்று திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் இன்று நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் புதிய படங்கள் வெளியாகாது என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பழைய படங்களையே திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் க்யூப் நிறுவனம் நவம்பர் மாதம் முழுவதும் விபிஎப் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த சலுகை திரையரங்குகளில் வெளியாகும் அனைத்து புதிய திரைப்படங்களும் பொருந்தும் என அறிவித்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் நவம்பர் மாதம் மட்டும் புதுப் படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.