இனிமேல் இந்திய படங்களின் அன்கட் வெர்ஷன் ரிலீஸ் இல்லை.. நெட்பிளிக்ஸ் எடுத்த முடிவு!
தமிழின் முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம். உலகளவிலும் ஓடிடி தளங்களில் நெட்பிளிக்ஸ்தான் நம்பர் 1. தற்போது தொடர்ந்து முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களைக் கைப்பற்றி வருகிறது.
நெட்பிளிக்ஸ் ஆரம்பகாலத்தில் திரையரங்கில் வெளியிட முடியாத சிறு பட்ஜெட் படங்களையும் வெளியிடும் ஒரு தளமாக இருந்தது. ஆனால் இப்போது அதிகளவில் மெய்ன்ஸ்ட்ரீம் படங்களுக்கே முக்கியத்துவம் பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் போன்ற ப்ராண்ட் இருந்தால்தான் படத்தை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்ய முடிகிறது.
இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனிமேல் இந்திய படங்களின் அன்கட் வெர்ஷனை ரிலீஸ் செய்யப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. இதற்கு சென்சார் போர்டின் மறைமுக அழுத்தம்தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ள்து. இதன் மூலம் அதிகார வர்க்கம் மற்றும் அரசை விமர்சிக்கும் படங்களை எடுக்கும் படைப்பாளிகளுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.