செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (15:19 IST)

4500 ரூபாய் கொடுத்து வாங்கிய செருப்பு.. நடிகை கஸ்தூரி பதிவுக்கு நெட்டிசன்கள் கிண்டல்..!

நடிகை கஸ்தூரி 4500 ரூபாய் கொடுத்து வாங்கிய செருப்பு இரண்டே மாதங்களில் டேமேஜ் ஆகிவிட்டது என்று பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த செருப்பையா 4500  ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள்? நானாக இருந்தால் 150 ரூபாய் கூட கொடுத்திருக்க மாட்டேன் என்று நெட்டிசன் கேலியும் கிண்டலும் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ் திரை உலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாயகியாக நடித்த கஸ்தூரி அதன் பின்னர் குணசத்திர நடிகை ஆகவும் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகவும் இருந்து வருகிறார். 
 
இந்த நிலையில் அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து வரும் கஸ்தூரி இன்று வெளியிட்ட வீடியோவில் 4500 ரூபாய் கொடுத்து வாங்கிய செருப்பு இரண்டே மாதங்களில் டேமேஜ் ஆகி விட்டதாகவும் நான் இதுவரை வாங்கிய மிக மோசமான செருப்பு இதுதான் என்றும் பதிவு செய்துள்ளார் 
 
இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட் அளித்த போது இந்த செருப்பு மாடலும் மோசம் கலரும் மோசம் இதையா 4500  ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள், இதையெல்லாம் நாங்கள் 150 ரூபாய்க்கு கூட வாங்க மாட்டோம், 4500 ரூபாய்க்கு வாங்கின முட்டாள் நீங்கள் தான் என்று கமெண்ட் பதிவாகி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva