செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (08:01 IST)

நடராஜனின் பயோபிக்கில் தனுஷா ? வேலையை ஆரம்பித்த நெட்டிசன்ஸ்!

இந்திய அணியில் இடம்பெற்று கலக்கி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனின் பயோபிக்கில் தனுஷ் நடிப்பதாக டீசரை உருவாக்கியுள்ளனர் ரசிகர்கள்.

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். டெத் ஓவர்களில் யார்க்கர்களாக வீசி இந்த சீசனில் உலகின் சிறந்த வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட பல வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் நடராஜன். இதையடுத்து இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி 2 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் நடந்த 3 டி 20 போட்டிகளிலும் விளையாடி 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து இப்போது இந்தியா முழுவதும் நடராஜன்  குறித்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்துள்ளன. இந்நிலையில் சமூகவலைதளங்களில் நடராஜனின் பயோபிக் உருவாக உள்ளதாகவும், அதில் தனுஷ் நடிக்க, சுதா கொங்கரா இயக்கி ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் ரசிகர்கள் போஸ்டர் மற்றும் டீசரை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். சமீபகாலமாக விளையாட்டு வீரர்களின் பயோபிக்கள் உருவாக்கப்பட்டு அவை மிகப்பெரிய வெற்றி பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.