1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (07:07 IST)

8 மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்படும் மெரினா; பொதுமக்கள் மகிழ்ச்சி!

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 8 மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது என்பதும் ஆனால் அதே நேரத்தில் செப்டம்பர் முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் கடந்த 8 மாதங்களாக பொதுமக்களுக்கு மெரினா கடற்கரையில் அனுமதி அளிக்கப்படவில்லை. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த வகையில் இன்று முதல் மெரினா கடற்கரை திறக்கப்படுகிறது. இதனை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
சென்னை மக்களின் செலவில்லாத ஒரே சுற்றுலா பகுதியான மெரினாவில் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது