புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (11:01 IST)

”நான் ராஜவிருந்துன்னு நெனச்சிட்டு வந்தேன்… ஏமாத்திட்டீங்க சார்”… விஜய்யை ஜாலியாக கலாய்த்த நெல்சன்!

சன் தொலைக்காட்சியில் விஜய்யை இயக்குனர் நெல்சன் எடுத்த நேர்காணல் இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விஜய் கலந்துகொண்ட நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சி நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பேட்டியில் விஜய் சொன்ன குட்டிக்கதை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் நெல்சன் விஜய் டின்னருக்கு அழைத்தது பற்றி பேசிய போது ‘சார் நீங்க டின்னருக்கு சாப்பிட கூப்டதும் ஏதோ ராஜவிருந்தா இருக்கப் போகுதுனு ஆசையா வந்தோம். ஆனால் நீங்க பிரியாணிய கொடுத்திட்டீங்க. அததான் தினமும் சாப்புட்றோமே சார். இனிமே நீங்க சாப்புட கூப்பிட்டிங்கன்னா நான் வீட்டுலயே சாப்பிட்டு வந்துடுவேன் சார்’ எனக் கூறியுள்ளார்.