செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (09:21 IST)

”புல்லாங்குழலும்… புட்பாலும்”…. விஜய் சொன்ன குட்டிக்கதை இதுதான்!

நடிகர் விஜய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சன் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணல் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விஜய் கலந்துகொண்ட நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சி நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பேட்டியில் விஜய் சொன்ன குட்டிக்கதை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

அதில் ‘புல்லாங்குழலும் புட்பாலும் ஒரு நாள் பேசிட்டு இருந்தாங்களாம். அதுல் புட் பால் கேட்டுச்சாம். நீயும் உள்ள காத்துதான் வச்சிருக்க, நானும் உள்ள காத்துதான் வச்சிருக்கேன். ஆனா என்ன எல்லாரும் ஒதைக்குறாங்க… உனக்கு எல்லோரும் முத்தம் கொடுக்குறாங்க ஏன்னு கேட்டுச்சாம்…. அதுக்கு புல்லாங்குழல் ‘நீ உனக்குள்ள இருக்குற காத்த உள்ளுக்குள்ளயே அடக்கி வச்சிருக்க…. ஆனா நான் எனக்குள்ள இருக்குற காத்த எல்லோருக்கும் இசையா கொடுக்குறேன். அதனால எனக்கு முத்தம் கொடுக்குறாங்க…. சுயநலமா இருந்தா ஒன்ன மாதிரி ஒத வாங்கவேண்டியதுதான்’னு சொல்லுச்சாம்’ என்ற குட்டி ஸ்டோரியைப் பகிர்ந்துகொண்டார். வழக்கமாக விஜய் தன்னுடைய படங்களின் ஆடியோ லான்ச் விழாவில் இதுபோல குட்டி ஸ்டோரிகளை பகிர்ந்து வருவார். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு குட்டி ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.