வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (10:23 IST)

என்னை நம்பிய சிவகார்த்திகேயனுக்கு நன்றி… நெல்சன் நெகிழ்ச்சி!

டாக்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் ஒரு சில நாட்களில் 50 கோடியை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

இதையடுத்து படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘தயாரிப்பாளராக, நடிகராக ஒரு நண்பராக என்னை நம்பிய சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய நன்றி. ழு ஒத்துழைப்பை அளித்த அனிருத் மற்றும்  குடும்பமாகவே இருந்த பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு, மிலிந்த் சோமன், ரெட்டின் கிங்ஸ்லி, அர்ச்சனா, இளவரசு, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘ எனத் தெரிவித்துள்ளார்.