வீரமங்கை வேலுநாச்சியாராக லேடி சூப்பர் ஸ்டார்! – விரைவில் அறிவிப்பு!
இந்திய விடுதலை போரில் வீரத்துடன் போரிட்ட வேலுநாச்சியார் கதையை படமாக எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய விடுதலை போராட்டத்தில் ஜான்சி ராணி போல தமிழகத்தில் வீரத்துடன் போரிட்டவர் வீரமங்கை வேலுநாச்சியார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் திருட்டு பயலே உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசி கணேசன் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் வேலுநாச்சியாராக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நயன்தாரா தெலுங்கு உள்ளிட்ட சில படங்களில் புராதாண கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும், தமிழில் முதன்முறையாக வரலாற்றில் முக்கியமான பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கலாம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.