புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 11 நவம்பர் 2017 (16:20 IST)

நயன்தாரா வருகை: சென்னை காசி தியேட்டருக்கு சிறப்பு பாதுகாப்பு

நடிகை நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பெரும்பாலான ஊடகங்களும், ஆன்லைன் விமர்சகர்களும் இந்த படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர். நயன்தாராவுக்கு இந்த படம் ஒரு மைல்கல் என்றே கூறப்படுகிறது



இந்த நிலையில் இன்று நடிகை நயன்தாரா  சென்னை காசி திரையரங்கில் 'அறம்' படம் பார்க்க வந்தார். அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் உற்சாகமாகி அவரை நெருங்கினர். ஆனால் சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் நயன்தாராவை பாதுகாவலர்கள் பத்திரமாக திரையரங்கிற்குள் அழைத்து சென்றனர்.

படம் முழுவதையும் நயன்தாரா பார்த்ததாகவும், எந்தெந்த காட்சிகளில் கைதட்டல், எந்தெந்த காட்சிகளில் சோகம் ஏற்பட்டது என்பதை நயன்தாரா கூர்ந்து கவனித்ததாகவும் கூறப்படுகிறது. நயன்தாராவின் வருகையால் காட்சி முடியும் வரை திரையரங்கம் பரபரப்பாக இருந்தது