புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 8 ஜனவரி 2019 (19:36 IST)

அஜித் சொல்லியும் கேட்காத நயன்: அப்படி என்ன பிடிவாதம்?

இயக்குனர் சிவா - அஜித் கூட்டணியில் நான்காவது படமாக வெளியாகிறது விஸ்வாசம். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
இந்நிலையில், அஜித் கூறியும் கூட விஸ்வாசம் படத்தின் ப்ரிவியூவை நயன்தாரா பார்க்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதாவது இப்படத்தினை புத்தாண்டு தினத்தன்று தன் மனைவி ஷாலினியுடன் சேர்ந்து பார்த்தார் அஜித். அதன் பின்னர் நயன்தாராவிற்கும் விஸ்வாசம் ப்ரிவியூவை போட்டு காட்டும்படி இயக்குநர் சிவாவிடம் கூறியுள்ளார்.
ஆனால், நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விக்னேஷ் சிவனுடன் வெளிநாடு சென்றதால் அப்போது இது நடக்கவில்லை. அதன் பின்னர் சிவா படத்தை போட்ட காட்ட நயன்தாராவை அழைத்த போது நான் ப்ரிவியூ பார்க்க விரும்பவில்லை என கூறிவிட்டாரம்.
 
படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியானதும் மக்களோடும், ரசிகர்களோடும் தியேட்டரில் சென்று பார்க்கிறேன் என கூறிவிட்டாராம். இதற்கு முன்னர் அறம் படத்தையும் தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார் நயன்தாரா.