ஏழை மாணவர்களுக்கு இப்படி ஒரு உதவியா? நெகிழ வைத்த அஜித் ரசிகர்கள்!

VM| Last Updated: ஞாயிறு, 6 ஜனவரி 2019 (17:48 IST)
தமிழ் சினிமாவின் தல என்று அழைக்கப்படும் அஜித்துக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் தல அஜித் போலவே பல நல்ல விஷயங்களை பொதுமக்களுக்கு செய்து வருகிறார்கள்.  
 
பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் நூலகத்தை அஜித் ரசிகர்கள் அமைத்துள்ளனர். சுமார் 500 புத்தகங்களுடன் சிறுகுழந்தைகளுக்கான நல்லொழுக்க கதைகள், சிறு கதைகள், பழக்கவழக்கங்கள் மேம்படுத்தும் புத்தகங்கள் ஆகியவை நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. 
 
இந்த நூலகத்தை மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பேரன் சலீம் திறந்து வைத்தார். அஜித் ரசிகர்களின் இந்த செயலை கேள்விப்பட்டு திரை உலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :