நயன்தாரா என்ற பெயரின் தமிழ் அர்த்தம் ‘உடுக்கண்ணி’… கவிஞரின் வைரல் பதிவும் எதிர்வினைகளும்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நயன்தாரா. சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அவர் பெயர் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்குக் காரணம் கவிஞர் மகுடேசுவரன் 7 வருடங்களுக்கு முன்பு முகநூலில் எழுதிய பதிவு. பல பிறமொழி சொற்களுக்கு தமிழ் சொற்களை கண்டறிந்து தனது பதிவுகளில் அவ்வப்போது பகிர்ந்து வருபவர் மகுடேசுவரன். அதுதவிர தமிழ் இலக்கணத்தைப் பிழையில்லாமல் எழுதுவது குறித்து 11 பாகங்கள் கொண்ட நூலையும் அவர் எழுதியுள்ளார்.
இந்நிலையில் நயன்தாரா என்ற பெயர் பற்றி அவர் எழுதியுள்ள பதிவில் “நயன்தாரா என்ற பெயர் தமிழ் இல்லை என்றும் அதை தமிழில் மாற்றினால் உடுக்கண்ணி” என்று வரும் எனவும் கூறியுள்ளார். இப்போது இந்த பதிவு திடீரென வைரலாகி வருகிறது. ஒரு சாரார் இதை ஆதரித்தாலும், மற்றொரு சாரார் பெயர் சொற்களை இப்படி மொழிபெயர்க்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.