நாளை நயன்தாராவின் அடுத்த படத்தின் டீசர்! ரசிகர்கள் உற்சாகம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'தர்பார்', தளபதி விஜயுடன் 'பிகில்' மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் சயிர நரசிம்மரெட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படம் 'லவ் ஆக்சன் டிராமா என்ற திரைப்படம் ஆகும்
மலையாளத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் 'நேரம்' புகழ் நிவின் பாலி நாயகனாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் நாளை அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியாகும் என்றும், இந்த டீசரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த நயன்தாராவின் தமிழ், மலையாள ரசிகர்கள் இந்த டீசரை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தயான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில், ஷான் ரஹ்மான் இசையில் ஜாமோன் ஜான் மற்றும் வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஓணம் திருவிழாவின்போது திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது