திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 30 நவம்பர் 2018 (10:00 IST)

நயன்தாரா ரசிகர்களுக்கு ஜனவரியில் இரட்டை விருந்து

தல அஜித்துடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதே ஜனவரியில் நயன்தாரா நடித்த இன்னொரு திரைப்படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவருடைய ரசிகர்களுக்கு ஜனவரியில் இரட்டை விருந்து காத்திருக்கின்றது.

நயன்தாரா நடித்த த்ரில் சஸ்பென்ஸ் திரைப்படமான 'கொலையுதிர்காலம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் செகண்ட்லுக் வெளிவந்துள்ளது, இந்த செகண்ட்லுக்கில் இந்த படம் 2019 ஜனவரி வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படம் ஜனவரி 26 குடியரசு தினத்தில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 17ல் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்பட்மும் ஆகஸ்ட் 30ல் 'இமைக்கா நொடிகள்' படமும் அடுத்தடுத்து வெளியாகி இரண்டும் சூப்பர் ஹிட் ஆகியது. அதேபோல் மீண்டும் இரண்டு வார இடையில் இரண்டு நயன்தாரா படங்கள் வெளியாகவுள்ளதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.