வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 22 ஜூன் 2020 (10:01 IST)

நயன்தாரா பாப்பா விக்கி குட்டியுடன் ஆட்டம் - வைரலாகும் Baby Couple

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது.

மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக வதந்திகள் பரவியது.

அதற்கு முற்று புள்ளி வைத்துள்ள நயன்தாரா இன்ஸ்டாகிராமில்  அவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தை போல் கியூட்டான ரியாக்ஷன் கொடுத்த வீடியோவை வெளியிட்டு "நாங்கள் உயிருடன், ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறோம். நீங்கள் கேலி செய்யும் கற்பனையையும் உங்கள் வேடிக்கையான நகைச்சுவையையும் காண கடவுள் எங்களுக்கு போதுமான பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளார். எனக்கூறி பதிவிட்டுள்ள இந்த சூப்பர் கியூட் வீடியோ அனைவரையும் ஈர்த்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hi