பெரிய பட்ஜெட் படங்கள்தான் சினிமாவை சீரழிக்கின்றன… நவாசுதீன் சித்திக் ஆதங்கம்!
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன. தென்னிந்தியாவில் இருந்து உருவான RRR, புஷ்பா மற்றும் கேஜிஎஃப் போன்ற படங்கள் வட இந்தியாவில் வசூல் வேட்டை நடத்துகின்றன. இந்த படங்களின் ரிலீஸால் இந்தி படங்களே தங்கள் ரிலீஸை தள்ளி வைத்துக் கொள்கின்றன. இந்நிலையில் பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் பெரிய பட்ஜெட் படங்களால்தான் திரையுலகம் சீரழிவை சந்திக்கிறது எனக் கூறியுள்ளர்.
இதுபற்றி அவர் “பெரிய பட்ஜெட் படங்களில் கதை, திரைக்கதை, நடிப்பு என எதுவும் இல்லை. 5 பாடல்களை நடன இயக்குனர் பார்த்துக் கொள்கிறார். ஸ்டண்ட் காட்சிகளை சண்டைப் பயிற்சி இயக்குனர் பார்த்துக் கொள்கிறார். அங்கு இயக்குனருக்கு என்ன வேலை இருக்கிறது? நடிகருக்கு என்ன வேலை? நல்ல நடிகனை வைத்து நல்ல கதையை இவர்கள் 50 கோடியில் படமாக எடுப்பதில்லை” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.