திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (16:00 IST)

தேசிய விருது பெற்ற இயக்குனர் துரை காலமானார்...!

Durai
பசி, நீயா உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் துரை இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. 
 
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்,  கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கியவர் இயக்குநர் துரை.  ஏழை மக்களின் வாழ்வியலை மிகவும் எதார்த்தமாக அவரின் படங்கள் காட்சிப்படுத்தும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர். 
 
கமல் நடித்த நீயா, சிவாஜியின் துணை, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள்,  அவளும் பெண் தானே, பசி, கிளிஞ்சல்கள் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 47 படங்களை இயக்கியுள்ளார். 

துரை இயக்கத்தில் 1979ம் ஆண்டு வெளியான 'பசி' திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை என மூன்று பிரிவுகளின் கீழ் அந்த ஆண்டிற்கான தேசிய விருதை கைப்பற்றியது. 
 
மேலும் அவளும் பெண் தானே படத்திற்காகவும் தேசிய விருதை வென்றார்.இது தவிர தமிழ்நாடு அரசு வழங்கும் சிறந்த இயக்குநருக்கான விருது மற்றும் கலைமாமணி விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

 
இயக்குநர் துரை மறைவு செய்தி திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.